சர்வதேச வலைப்பின்னலுக்குட்படுத்தப்பட்ட வத்தளை பிரதேச சபை
பெருமைக்குரிய வத்தளை பிரதேச சபையின் பரம்பரை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பதிவு செய்யும் இணைய சேவைக்கு உங்களை வரவேற்கிறோம். மிகவும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான பொது சேவையை உங்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும்.
இந்தச் சேவையின் மூலம் மதிப்பீட்டு வரி, கடை வாடகை, வணிக வரி, வர்த்தக உரிமக் கட்டணம் செலுத்தவும், கலிபவுசர் இயந்திரத்தின் சேவையைப் பெறவும், விழாக் கூடம், விளையாட்டு மைதானம், தகனம் செய்வதற்கு பணம் செலுத்தவும், விண்ணப்பங்கள் அனைத்தையும் பதிவிறக்கம் (னுழறடெழயன) செய்யவும் இணையம் மூலம். வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், எங்கள் நிறுவனத்திடமிருந்து உங்களுக்குத் தேவையான தகவல்களையும் சேவைகளின் கூடுதல் விவரங்களையும் உடனடியாக அறிந்துகொள்ளும் திறனை இது உங்களுக்கு வழங்கியுள்ளது. தெருவிளக்குகள், திடக்கழிவுகளை அகற்றுதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், ஆபத்தான மரங்கள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கவும் வாய்ப்பு வழங்கப்படு கிறது.
உலகில் எங்கிருந்தும் நம்பகத்தன்மையுடனும் திறமையுடனும் இந்தச் சேவையை அணுகுவது மற்றும் எந்த வங்கிக் கட்டண அட்டையையும் பயன்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் நிறுவனம் மற்றும் இந்த சேவை தொடர்பான உங்கள் மதிப்புமிக்க கருத்துகள் மற்றும் பரிந்துரைகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.