January 8, 2025

சபையின் ஸ்தாபனம்

Capture

வத்தளை பிரதேச சபையின் ஆரம்ப புகைப்படமொன்று.


வத்தளை பிரதேச சபையின் ஸ்தாபனம்

இலங்கையில் 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்திற்காக இருந்த மாவட்ட அபிவிருத்திச் சபையின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரகாரம்,  மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தின் வத்தளைத் தொகுதிக்காக 1987 மே 12 ஆம் திகதி விசேட வர்த்தமானி இலக்கம் 453ஃ1987 மூலம் வத்தளை பிரதேச சபை நிறுவப்பட்டது.


1988 ஆம் ஆண்டு முதலாவது தவிசாளராக வத்தளை மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர் திரு.எச்.ஜோசப் பெனடிக் பெரேரா, வத்தளை பிரதேச சபையின் செயலாளர் குணசிறி தர்மபால, ஆகியோர் பிரதேச சபையில் பணியாற்றியமை விசேட அம்சமாகும். இதில் இருபத்தி ஒரு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதேச சபையின் முதலாவது அமர்வு 08.01.1988 அன்று ஹெந்தல நகர சபை மண்டபத்தில் நடைபெற்றதுடன் 19.10.1988 முதல் வெலிசர உப அலுவலகத்தின் மேல்மாடி சபை மண்டபம் புதிதாக திறக்கப்பட்டு அதற்காக பயன்படுத்தப்பட்டது. 


அதனையடுத்து வத்தளை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்த சிறிகமல் டி சில்வா பிரதேச சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் எமது பிரதேச சபையானது ஹந்தல, வெலிசர, பமுனுகம மற்றும் தலாஹேன ஆகிய நான்கு உப அலுவலகங்களைக் கொண்டிருந்ததோடு, மேற்கில் கடல், வடக்கே கொழும்பு மாநகர சபை, தெற்கே நீர்கொழும்பு மாநகர சபை, கிழக்கில் நீர்கொழும்பு குளம், ஜா எல பிரதேச சபை, மஹர பிரதேச சபை மற்றும் வத்தளை மாபோல நகரசபை ஆகிய மூன்று துணை அலுவலகங்களும் எல்லைகளாக இருந்தன. பிற்காலத்தில் தலாஹேன உப காரியாலயம் நீர்கொழும்பு நகர சபையுடன் இணைக்கப்பட்டதனால் வத்தளை பிரதேச சபை எஞ்சிய மூன்று அலுவலகங்களுக்குள் அடங்கியுள்ளது. 


தற்போது, நாற்பது கிராம சேவை பிரிவுகள் உள்ளன மற்றும் மக்கள் தொகை ஒரு லட்சத்து அறுபத்தி இரண்டாயிரத்து முந்நூற்று முப்பத்தொன்று, மற்றும் அதிகார வரம்பின் அளவு 54.6 சதுர கிலோமீட்டர் ஆகும். உறுப்பினர்களின் எண்ணிக்கை முப்பத்தைந்து. பணியாளர்களின் எண்ணிக்கை இருநூற்று ஐம்பது.


You may have missed