Skip to content
- பிரதேச சபை சட்டத்திற்கமைய பொறுப்புச் சாட்டப்பட்டுள்ள எழுத்துமூல சட்டங்களின் கீழ் காணப்படும் விதிகளை நிறைவேற்றல.
- வேறு எழுத்துமூல நீதியின் கீழ் உள்ள விதிகளை நிறைவேற்றுதல.
- தொற்று நோய்கள் மற்றும் பரவக்கூடிய நோய்களைத் தடுத்தல.
- சுகாதார கல்வி மற்றும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.
- ஆபத்தான மற்றும் விரும்பத்தகாத வர்த்தகங்களை ஒழுங்குபடுத்துதல்.
- விற்பனைக்கான உணவுப் பொருட்களின் தரக் கட்டுப்பாட்டை நிறுவுதல்.
- நெடுஞ்சாலைத் தூண்கள், நடைபாதையிலுள்ள மதகுகள், பள்ளங்கள் போன்றவற்றைக் கட்டுதல் மற்றும் பராமரித்தல்.
- கட்டடங்கள் மற்றும் நிர்மாணப் பணிகளை சீராக்கல் மற்றும் அவற்றை முகாமைப்படுத்தல்.
- பொதுச் சந்தைகளை அமைத்து அவற்றை பராமரித்தல்.
- தெரு விளக்குகளை அமைத்தல்.
- மயான பூமிகளை மற்றும் தகனக் கிரிகை நிலையங்களை பராமரித்தல்.
- பூங்காக்கள் மற்றும் திறந்த வெளிகளை பராமரித்தல்.
- நூல் நிலைய சேவைகளை பராமரித்தல்.
- முன்பள்ளிகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களை நடத்துதல்.
- விளையாட்டு மைதானங்களை நிறுவி அதனை பராமரித்தல்.
- பலவித காரணங்களுக்காக தேவையான இடைக்கால துணைச் சட்டங்களை உருவாக்கல்.
- சுற்றாடல் சுத்தத்தைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றைப் பராமரித்தல்.
- மக்களின் பொது நலனுக்காக பிரதேச சபைச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரம்புக்குள் தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ளல்.
- தேசிய அபிவிருத்தியின் போது மத்திய அரசாங்கத்துக்குத் தேவையான சேவையை உள்ளுராட்சி சபையின் மூலம் வழங்குதல்.
- பிரதேச மக்கள் செலுத்தும் வரியின் பலன்களை அவர்களுக்கு முடிந்தவரை திருப்பிக் கொடுத்தல் போன்றவை.